தமிழ் என் தாய் மொழி | தமிழ் கவிதை

தமிழ் என் தாய் மொழி

தமிழ் என் தாய் மொழி

தவழும் போது தாலாட்டாய் கேட்ட மொழி
வையகம் வியக்க வள்ளுவன் கையில் உதிர்ந்த மொழி 
சிந்தை மகிழும் சிறப்பு ழகரம் பெற்ற மொழி
என் உயிரில் இனிக்கும் இனிய மொழி என் தாய்மொழி                     

பண்டை தொட்டு இன்று வரை சிறந்து வாழ்ந்து
பகைவர் தம் சூழ்ச்சிகளை முறியடித்து 
தன் இசை தமிழால் உலகினயே கொள்ளையடித்து
வெற்றி களிப்பில் உலாவரும் செம்மொழி என் தாய்மொழி

இயல், இசை, கூத்து என்றே 
உயிரில் கலந்த உண்மை மொழி
கஞ்சத்தனம் சிறிதும் இன்றி
வஞ்ச மில்லா வார்த்தை தரும் வள்ளல் மொழி

கீழடியில் தோண்டும் போது 
முதிர்ந்த முத்தாய் வெளிவந்த
இயற்கை தந்த இனிய
தமிழ் என் தாய் மொழி
தமிழ் என் தாய் மொழி | தமிழ் கவிதை தமிழ் என் தாய் மொழி | தமிழ் கவிதை Reviewed by Mohamed Mafaz P R on December 27, 2021 Rating: 5

No comments:

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.